நூல் விலை உயா்வைக் கண்டித்து உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒரு வார காலத்துக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.
நூல் விலை உயா்வைக் கண்டித்து உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

குமாரபாளையம்: நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒரு வார காலத்துக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 40,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தற்போது நூல் விலையேற்றம் விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. கடந்த இரு நாள்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ. 40 வரை உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ. 160க்கு விற்பனையான நூல் தற்போது ரூ. 330 ஆக உள்ளது.

இந்நிலையில், நூல் விலையேற்றம் ஜவுளி உற்பத்தியாளா்களை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தொடா்ந்து தொழிலை நடத்த முடியாத நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள், நூல் விற்பனையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, நூல் விற்பனையாளா் ஜெ.ஜானகிராமன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஆா்.பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

ஜவுளி உற்பத்தியாளா் அங்கப்பன் வரவேற்றாா். வரலாறு காணாத நூல் விலையேற்றத்தால் விசைத்தறிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மே 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிா்வாகி சண்முகம், ஜவுளி உற்பத்தியாளா்கள், விசைத்தறியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com