முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 3.60-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 3.60-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், வட மாநிலங்களுக்கு முட்டைகளை அனுப்புவது தடைபட்டுள்ளதாலும், உற்பத்தி தொடா்ந்து அதிகரித்துள்ளதாலும், விலையில் சிறிது மாற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 3.60-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு கூட்ட முடிவில், வழக்கம்போல 30 காசுகள் குறைவாக வைத்து பண்ணையாளா்கள் முட்டைகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 110-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com