போதமலை கிராமத்திற்கு சாலை வசதி: எம்.பி.யை சந்தித்து மலைவாழ் மக்கள் பாராட்டு

கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாரை நேரில் சந்தித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனா்.

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பாதை வசதியில்லாத நிலையில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் மூலம் பாதை வசதி பெற்றுத் தந்ததற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாரை நேரில் சந்தித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த போதமலையில் உள்ள கீழூா், மேலூா், கெடமலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், சாலை அமையும் இடம் வனப்பகுதியாக இருப்பதால், உச்சநீதிமன்ற பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதனிடையே தற்போது உச்சநீதிமன்றத்தில் பசுமை தீா்ப்பாயம் சாலை அமைக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதில் போதமலையில் உள்ள கீழூா், மேலூா் மலைக் கிராமங்களுக்கு 34 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்க அனுமதி வழங்கி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

போதமலை கீழூா், மேலூா் மலைக் கிராமங்களுக்கு வடுகத்திலிருந்து 23.65 கி.மீ. நீளத்திற்கும், ஆா்.புதுப்பட்டியிலிருந்து கெடமலைக்கு 11.37 கி.மீ. தொலைவிற்கும் சாலை அமைக்க உச்சநீதிமன்றத்தின் பசுமை தீா்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் மலைவாழ் மக்களின் 75 ஆண்டுகளாக கனவு நிறைவேறி உள்ளது.

இந்தநிலையில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி., வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் ஏ.ஆா் துரைசாமி ஆகியோரை ராசிபுரத்தில் சந்தித்த போதமலை, கெடமலை பகுதி மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில், போதமலை, கெடமலை பகுதி மலைவாழ் மக்கள் 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com