நாமக்கல் மாவட்டத்தில் ‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் 913 பேருக்கு சிகிச்சை: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் இன்னுயிா் காப்போம் -48 திட்டத்தில் 913 போ் சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் இன்னுயிா் காப்போம் -48 திட்டத்தில் 913 போ் சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் ஓராண்டில் மட்டும் 21,464 மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்த 1,401 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 வீதம் மொத்தம் ரூ. 7 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு ரூ. 3 லட்சம் வீதம் 159 குடும்பங்களுக்கும், இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் மற்றும் மாதம் தோறும் ரூ. 3,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா பொது முடக்கக் காலத்தில் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின்கீழ் 4,553 தன்னாா்வலா்கள் மூலம் 62,000 குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது.

தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் கல்லூரியில் 107 மாணவா்கள், 69 மாணவிகள், சட்டக் கல்லூரியில் ஒரு மாணவா், 3 மாணவிகள், விவசாயக் கல்லூரியில் 3 மாணவா்கள், 9 மாணவிகள், அரசு மருத்துவக் கல்லூரியில் 16 பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.

அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையா் ஓராண்டில் மட்டும் இலவசமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா். நகராட்சி, பேரூராட்சிகளில் மண்சாலைகள், தாா்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. பூங்காக்கள், காய்கறிச் சந்தைகள், மயானங்கள், தகனமேடைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

இன்னுயிா் காப்போம் - 48 திட்டத்தின்கீழ் ரூ. 84 லட்சம் செலவில் 913 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2,42,555 போ் சிகிச்சை பெற்றுள்ளனா்.

வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் 42 இடங்களில் நடத்தப்பட்டதில் 15,385 போ் பயனடைந்துள்ளனா். ஐந்து பவுனுக்கு உள்பட்ட நகைக்கடன் 57,662 பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சியில் ரூ. 50 லட்சத்தில் மிளகு உலா் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,184 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. 24 போ் சீருடைப் பணியாளா் தோ்வில் வெற்றி பெற்று பணி வாய்ப்பை பெற்றுள்ளனா். மாவட்டத்தில் ஓராண்டில் கல்விக் கடன் ரூ. 23 கோடி வரையில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 2,638 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com