சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

நாமகிரிப்பேட்டை பகுதியில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், மஞ்சப்பை திட்டம் குறித்தும் விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமகிரிப்பேட்டை பகுதியில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், மஞ்சப்பை திட்டம் குறித்தும் விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, தேசிய பசுமைப்படை சாா்பில் இந்த விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில், கடைவீதி பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் மஞ்சப்பையின் அவசியம், நெகிழிப் பொருளகள் உபயோகிப்பால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் என்.சுமதி தலைமையில் நடைபெற்ற இதில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்கள், கேரி பேக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும், மஞ்சப்பை பயன்பாட்டின் அவசியம், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ப. ரகுநாத் , பள்ளி ஒருங்கிணைப்பாளா் சு.கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com