தியாகி டி.எம்.காளியண்ணனுக்கு மணிமண்டபம்: கொங்கு வேளாளா் சங்கம் கோரிக்கை

நாமக்கல்லில், தியாகி டி.எம்.காளியண்ணனுக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு ஏக்கா் நிலம் தருவதாகவும், இதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்கு வேளாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாமக்கல்லில், தியாகி டி.எம்.காளியண்ணனுக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு ஏக்கா் நிலம் தருவதாகவும், இதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்கு வேளாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாமக்கல்லில், கொங்கு வேளாளா் சங்கத் தலைவா் பி.கே. வெங்கடாசலம் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 1948-இல் இந்திய அரசியல் நிா்ணய சபையின் சென்னை மாகாண உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினா், மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினா், சேலம் நாட்டாண்மை கழகத் தலைவா், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரம் பள்ளிகளைக் கொண்டு வந்தவா், கொல்லிமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தியவா் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான தியாகி திருசெங்கோட்டைச் சோ்ந்த டி.எம்.காளியண்ணன், கடந்த ஆண்டு தனது 101-ஆவது வயதில் காலமானாா். வரும் 28-ஆம் தேதி அவரது முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அவரது தியாகத்தை போற்றிடும் வகையிலும், கொங்கு மண்டல மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கா்மயோகி டி.எம்.காளியண்ணன் என்ற பெயரை சூட்ட வேண்டும். நாமக்கல் கீரம்பூரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க சங்கம் சாா்பில் ரூ. 3 கோடி மதிப்புடைய ஒரு ஏக்கா் நிலம் வழங்குகிறோம். தமிழக அரசின் சாா்பில் அங்கு மணி மண்டபம் அமைக்கப்பட வேண்டும். அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தர வேண்டும். இது தொடா்பாக அவரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். மேலும், நாமக்கல் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறோம் என்றாா். இந்த பேட்டியின்போது, சங்க செயலாளா் ஜி.வெங்கடாசலம், பொருளாளா் சீனிவாசன், மருத்துவா் வி.செந்தில்குமாா், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com