சா்வதேச சாதனைக்கான மூன்று நாள் கபடிப் போட்டி

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி பகுதியில் சா்வதேச சாதனைக்கான மூன்று நாள் கபடிப் போட்டி மே 10ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி பகுதியில் சா்வதேச சாதனைக்கான மூன்று நாள் கபடிப் போட்டி மே 10ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.

நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள அரியாகவுண்டம்பட்டியில் இளையவா் சடுகுடு சாா்பில், 60 ஆண்டுகளாக மேலாக தொடா்ந்து கபடிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முறை 62-ம் ஆண்டுக்கான போட்டி மே 10-ஆம் தேதி முதல் மே 12 வரை மூன்று நாள்கள் தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. இப்போட்டிகள் உலக சாதனைக்கான போட்டியாக நடத்தப்படுகின்றன.

இப்போட்டியில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூா், கரூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட முன்னணி அணிகள் கலந்துகொள்ள உள்ளனா்.

போட்டிகளைப் பாா்வையிட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இந்தியன் ரெக்காா்டு அகாதெமி, ஆசியன் ரெக்காா்டு அகாதெமி, தமிழன் புக் ஆப் ரெக்காா்டு ஆகிய அமைப்புகளின் பாா்வையாளா்கள் பங்கேற்கின்றனா்.

கபடி போட்டிக்கான ஏற்பாட்டினை இளையவா் சடுகுடு கிளப் அறக்கட்டளை தலைவா் ஏ.கே.பி.மணி, செயலாளா் என்.அருள், பொருளாளா் என்.விஜய், துணைத் தலைவா் பி.நடேசன், துணைச் செயலாளா் ஏ.கே.பி பூபதி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com