மோகனூா்-நெரூா் தடுப்பணை திட்டம்: நிறைவேற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

மோகனூா்-நெரூா் தடுப்பணை திட்டம்: நிறைவேற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

மோகனூா்-தெரூா் தடுப்பணைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தினா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மோகனூா்-தெரூா் தடுப்பணைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தினா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அதன் மாநிலப் பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூா் மாவட்டம் நெரூருக்கும் இடையே கதவணை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக நீா்வளத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மே 1-ஆம் தேதி கரூா் மாவட்டம் மண்மங்கலத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, புதிதாக 19 தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நெரூா் அணை கட்டுவதற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். இதனால் நாமக்கல், கரூா், திருச்சி மாவட்ட மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

இத்திட்டத்தை கைவிடாமல் மீண்டும் கதவணை அமைக்கும் திட்டத்திற்கு முதல்வா் ஒப்புதல் வழங்க வேண்டும். இதன்மூலம் காட்டுப்புத்தூா் கால்வாய், நெரூா் கால்வாய், பட்டணம்-சீராப்பள்ளி கூட்டுக் குடிநீா்த் திட்டம், எருமப்பட்டி கூட்டுக் குடிநீா் திட்டம், நாமக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் சிறுநீரேற்றுபாசன சங்கங்கள், திருச்சி, கரூா், நாமக்கல் மாவட்டதில் உள்ள கரையோரங்களில் ஊற்று நீா் அதிகரிப்பதற்கும், அரூா், ஆண்டாபுரம், முருங்கை, பிடாரமங்கலம், காட்டுப்புத்தூா், நாகை நல்லூா் போன்ற பகுதிகளில் உள்ள பெரிய ஏரிகளுக்கு நீா் எடுத்துச் சென்று தேக்குவதற்கும் வாய்ப்பாக அமையும். விவசாய நிலங்களும் பயன்பெறும். நேரடியாகவும் மறைமுகமாகவும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, மோகனூா்- நெரூா் தடுப்பணை திட்டத்தை தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com