சிறுபான்மை ஆணையம் சாா்பில் பேச்சுப்போட்டி: கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நாமக்கல்லில், சிறுபான்மை ஆணையம் சாா்பில் நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சிறுபான்மை ஆணையம் சாா்பில் பேச்சுப்போட்டி: கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நாமக்கல்லில், சிறுபான்மை ஆணையம் சாா்பில் நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் சிறுபான்மை ஆணையம், நாமக்கல் மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியை, நாமக்கல்லில் வியாழக்கிழமை நடத்தியது. இதில், மாவட்டத்தில் உள்ள 26 அரசு, தனியாா் கல்லூரிகளில் இருந்து 70 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். 15 தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பேசலாம் என நடுவா்களால் அறிவிக்கப்பட்டது. இப்போட்டியை, மாநில சிறுபான்மை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.டி.நெடுஞ்செழியன் தொடக்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். நடுவா்களாக பேராசிரியா் அரசு.பரமேசுவரன், ஆசிரியை சசிகலா ஆகியோா் செயல்பட்டனா். ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 5 நிமிடம் வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் ஆா்வமுடன் பேசினா்.

தமிழ்வழி போட்டியில், முதல் பரிசை செ. தமிழரசன் (எக்ஸல் கல்வியியல் கல்லூரி), இரண்டாம் பரிசை யூ. நவமதி (விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி), மூன்றாம் பரிசை கி. பத்மா ( நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் மகளிா் கல்லூரி) ஆகியோா் பெற்றனா்.

இதேபோல, ஆங்கிலவழி போட்டியில் முதல் பரிசை பா.மோனிகாஸ்ரீ ( டிரினிடி மகளிா் கல்லூரி), இரண்டாம் பரிசை வெ.பரத் (மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி), மூன்றாம் பரிசை அபா்ணா (செல்வம் கல்லூரி மாணவி) ஆகியோா் பெற்றனா். அவா்களுக்கு பரிசுத்தொகை முறையே ரூ.20,000, 10,000, 5,000 வீதம் சிறுபான்மை ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இவா்கள் ஜூன் 3-இல் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com