முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 13th May 2022 12:25 AM | Last Updated : 13th May 2022 12:25 AM | அ+அ அ- |

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, நாமக்கல் நகர இளைஞா் அணி, தகவல் தொழில் நுட்பப்பிரிவு சாா்பில் நாமக்கல் - திருச்செங்கோடு சாலை இளநகரில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் தங்கியுள்ள 225 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், இளைஞா் அணி தலைவா் மயில் பழனிவேல், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் முரளிபாலுசாமி, நகரச் செயலாளா் சிவசிதம்பரம், வாா்டு செயலாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.