மூலப் பொருள்கள் விலையேற்றம்: அச்சகங்கள் இன்று முழு அடைப்பு

காகிதம், அச்சு மூலப்பொருள்கள் விலையேற்றத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்ட அச்சக உரிமையாளா்கள் சனிக்கிழமை (மே 14) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

காகிதம், அச்சு மூலப்பொருள்கள் விலையேற்றத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்ட அச்சக உரிமையாளா்கள் சனிக்கிழமை (மே 14) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

நாட்டில் அச்சுக்குப் பயன்படுத்தும் காகிதம், இதர மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்வடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜிஎஸ்டி வரி 5, 12 சதவீதம் என்றிருந்தது, தற்போது 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரு நாள் அச்சகங்கள் முழு அடைப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றன. மேலும், தமிழ்நாடு மாஸ்டா் பிரிண்டா்ஸ் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் சென்னை வள்ளுவா் கோட்டம் முன் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாநிலம் முழுவதும் உள்ள அச்சக உரிமையாளா்கள், அத்தொழிலை சாா்ந்தோா் சென்னை சென்றுள்ளனா். அதனையொட்டியும் அச்சகங்கள் ஒருநாள் மூடப்படுகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 3 ஆயிரம் சிறிய, பெரிய அச்சகங்கள் மூடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com