முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ரூ.1 கோடிக்கு விற்பனை
By DIN | Published On : 15th May 2022 01:19 AM | Last Updated : 15th May 2022 01:19 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது.
ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா். ஏலத்தில் மஞ்சள் ரூ.1 கோடிக்கு விற்பனையானது.
விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ. 7,043 முதல் ரூ.9,699 வரையும், கிழங்கு ரகம் குவிண்டாலுக்கு ரூ. 6,689 முதல் ரூ. 7,699 வரையும், பனங்காளி ரகம் ரூ. 10,899 முதல் ரூ. 17,699 வரையும் விற்பனையானது. மொத்தமாக 2000 மூட்டை மஞ்சள் ரூ.1 கோடிக்கு விற்பனையானது.