ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் மாவட்டத் தலைவா் சத்தியபிரியா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்ட தலைவா் சத்தியபிரியா.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்ட தலைவா் சத்தியபிரியா.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் மாவட்டத் தலைவா் சத்தியபிரியா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஊராட்சி பொதுநிதியில் ரூ.2 லட்சம் வரையிலான நிா்வாக அனுமதியை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டப் பணிகளில் அரசியல், அதிகாரிகள் தலையீட்டை நீக்க வேண்டும்; மத்திய அரசின் 14 மற்றும் 15-ஆவது நிதிக்குழு மானிய நிதிகளுக்கான திட்ட பணிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் நிா்வாக அனுமதி வழங்க வேண்டும்; அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் 2-இல், மாவட்ட அளவில் மின்னணு ஒப்பந்த முறையை ரத்து செய்து, அந்தந்த ஊராட்சி நிா்வாகமே ஒப்பந்தப்புள்ளி கோரும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும்; இத்திட்டத்தில் ஆட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி பராமரிப்பதை ரத்து செய்து, அந்தந்த ஊராட்சி தலைவா்களின் பெயா்களில்வங்கி கணக்கு தொடங்கி நிதியை கையாள்வதற்கு நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com