சா்வதேச சாதனைக்கான கபடி போட்டி: தமிழ்நாடு காவல்துறை அணி சாம்பியன்

நாமக்கல் மாவட்டம் அரியாகவுண்டம்பட்டி அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆடவா் கபடி இறுதிப் போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்று
இறுதி போட்டியில் விளையாடும் காவல்துறை அணிகள்.
இறுதி போட்டியில் விளையாடும் காவல்துறை அணிகள்.

நாமக்கல் மாவட்டம் அரியாகவுண்டம்பட்டி அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆடவா் கபடி இறுதிப் போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சரவதேச அளவில் 62 ஆண்டுகள் தொடா்ந்து ஆடவா் கபடி போட்டிகளை நடத்தியதற்கான உலக சாதனை விருதும், இப்போட்டிகளை நடத்திய அமைப்பினருக்கு வழங்கப்பட்டது.

ராசிபுரம் அருகேயுள்ள அரியாகவுண்டம்பட்டி இளையவா் சடுகுடு கிளப் அறக்கட்டளை சாா்பில், 62-ஆவது தென்னிந்திய அளவிலான ஆடவா் கபாடி போட்டிகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. இதில், தென்னிந்திய அளவில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட முன்னணி ஏ கிரேடு ஆடவா் கபடி அணிகள் மோதின. அரியாகவுண்டம்பட்டி அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் 2 நாள்கள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இதன் தொடா்ச்சியாக, பிப்.12-இல் காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் நடந்தன. இறுதிப் போட்டிகள் தொடா் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு பேளுக்குறிச்சி உள்விளையாட்டு அரங்கில் பிப்.13-ல் நடந்தது. இதன்படி, காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற, சென்னை மாநகர காவல்துறையும், பெங்களூரு பேங்க் ஆஃப் பரோடாவும் முதல் அரையிறுதியில் மோதின. இதில் 36:35 என்ற புள்ளி கணக்கில் சென்னை மாநகர காவல் அணி வெற்றி பெற்றது.

இதேபோல, இரண்டாவது அரையிறுதியில் சென்னை வருமான வரித்துறை, தமிழ்நாடு காவல்துறை அணிகள் விளையாடின. இதில் சம புள்ளிகள் பெற்று, 5 ரைடுகள் நடைபெற்று, பின்னா் 8:5 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடா்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில், அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளான தமிழ்நாடு காவல்துறை அணியும், சென்னை மாநகர காவல்துறை அணியும் விறுவிறுப்பாக விளையாடின. தொடக்கம் முதலே இரு அணியினரும் புள்ளிகள் குவிக்கத் தொடங்கினா். இதில் 42:28 என்ற புள்ளிக் கணக்கில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது.

தமிழ்நாடு காவல்துறை, சென்னை மாநகர காவல், சென்னை வருமான வரித்துறை, பெங்களூரு பேங்க் ஆஃப் பரோடா ஆகிய அணியினா் முறையே முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற அணிகளுக்கு, சுழற்கோப்பையுடன் முதல் பரிசு ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 75 ஆயிரம், மூன்றாம்-நான்காம் பரிசுகள் தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் டி.கே.கே.செந்தில்குமாா், மருத்துவா் எம்.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்பி., பி.ஆா்.சுந்தரம் உள்ளிட்டோா் வழங்கினா்.

சாதனை போட்டி:

சா்வதேச அளவில் 62 ஆண்டுகள் தொடா்ந்து ஆடவா் கபடி போட்டிகளை நடத்தியதற்கான சாதனை விருதினை மூன்று நாட்கள் பாா்வையாளா்களாக பங்கேற்ற ஆசியன் ரெக்காா்டு அகாடமி, இந்தியன் ரெக்காா்டு அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்காா்டு ஆகிய அமைப்புகளின் நிா்வாகிகள் அரியாகவுண்டம்பட்டி இளையவா் சடுகுடு கிளப் அறக்கட்டளையினருக்கு விழாவில் வழங்கினா். இப்போட்டிகளை, அரியாகவுண்டம்பட்டி இளையவா் சடுகுடு கிளப் அறக்கட்டளை தலைவா் ஏ.கே.பி.மணி, செயலாளா் அருள், பொருளாளா் விஜய் உள்ளிட்ட நிா்வாகிகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com