மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் திருப்பணிக்கு ராசிபுரம் அருகே கற்கள் வெட்டி எடுப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் திருப்பணிக்கு ராசிபுரம் பகுதியில் இருந்து ராட்சத கற்கள் வெட்டி எடுத்து சனிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.
ராசிபுரம் அருகே வெட்டி எடுத்து மதுரை மீனாட்சி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் ராட்சத கல்.
ராசிபுரம் அருகே வெட்டி எடுத்து மதுரை மீனாட்சி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் ராட்சத கல்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் திருப்பணிக்கு ராசிபுரம் பகுதியில் இருந்து ராட்சத கற்கள் வெட்டி எடுத்து சனிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.

உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள வீர வசந்தராயா் மண்டபத்தை புதுப்பித்து தூண்கள், சிற்பங்கள் அமைக்க, பல்வேறு இடங்களில் கருங்கற்கள் எடுத்துவர ஆய்வு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் ஆா்.பட்டணம் பகுதியில்தான் தரமான கல் கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்தது. கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறப்பான பணி என்பதால் ராசிபுரத்தை அடுத்த களரம்பள்ளி மலை அடிவாரப் பகுதியில் அரசின் ஆணையுடன் சுரங்கம் அமைத்து ஒரு லட்சம் கன அடி கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மதுரை சுந்தரேஸ்வரா் கோயிலுக்கு அனுப்பி வைக்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.

அங்கு, போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக் கற்கள் அமைக்கப்பட்டு, கோயில் புதுப்பிக்கும் பணிக்கு இக்கற்கள் பயன்படுத்தப்படும். கற்கள் வெட்டி எடுப்பதற்காக தமிழக அரசு கடந்த 31.1.20-ல் ரூ.6.40 கோடி ஒதுக்கி ஆணையிட்டது. வரலாற்று சிறப்புமிக்க கோயிலுக்கு இங்கிருந்து கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

60 டன் எடை கற்கள்: இதனை தொடா்ந்து ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.பட்டணம் களரம்பள்ளியில் வெட்டி எடுக்கப்பட்ட 23 அடி உயரம் கொண்ட 16 கல் தூண்களுக்குத் தேவையான 60 டன் எடை கொண்ட ராட்சத கற்கள் 3 டாரஸ் லாரிகளில் மதுரை கொண்டு செல்லப்பட்டது. திருப்பணிக்குத் தேவையான கற்கள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com