மாா்க்சிஸ்ட் செயலாளா் பாலகிருஷ்ணன் கு.சின்னப்பபாரதியிடம் நலம் விசாரிப்பு
By DIN | Published On : 20th May 2022 12:49 AM | Last Updated : 20th May 2022 12:49 AM | அ+அ அ- |

நாமக்கல்லைச் சோ்ந்த பிரபல முற்போக்கு எழுத்தாளா் கு.சின்னப்பபாரதியிடம், மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை உடல் நலம் குறித்து விசாரித்தாா்.
நாமக்கல்-மோகனூா் சாலை முல்லை நகரைச் சோ்ந்த கு.சின்னப்பபாரதி(87) தாகம், சங்கம், சா்க்கரை பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளாா். இவை 13 மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் சின்னப்பபாரதி அவதிப்பட்டு வருகிறாா். அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வந்த மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் நேரடியாக சின்னப்பபாரதியின் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தாா். குடும்பத்தினரிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினாா்.