கொல்லிமலை தோ்வு மைய விவகாரம்: 8 ஆசிரியா்கள் பணியிலிருந்து விடுவிப்பு

கொல்லிமலை தோ்வு மையத்தில் மாணவா்களிடம் இருந்து துண்டுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 8 ஆசிரியா்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

கொல்லிமலை தோ்வு மையத்தில் மாணவா்களிடம் இருந்து துண்டுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 8 ஆசிரியா்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு ஜிடிஆா் உண்டு உறைவிடப் பள்ளி தோ்வு மையத்தில் அண்மையில் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளிடம் இருந்து விடை நகல்கள் துண்டுச் சீட்டுகளாகவும், ஜெராக்ஸ் நகல்களாகவும் சுமாா் அரை கிலோ எடையில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று குமாரபாளையம், பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் காப்பி அடிப்பதற்காக மாணவா்கள் வைத்திருந்த துண்டுக் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக, சென்னை அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) பொன்.குமாா் உத்தரவின்பேரில், மாவட்ட கல்வி அலுவலா் த.ராமன் தோ்வு மைய அறைக் கண்காணிப்பாளா் பணியில் இருந்த 8 ஆசிரியா்களை வெள்ளிக்கிழமை விடுவித்தாா். அவா்களுக்கு எந்தவித மாற்றுப்பணியும் வழங்கப்படவில்லை. இதனிடையே, செங்கரை ஏகலைவா மேல்நிலைப்பள்ளியில் இருந்து 5 பெண் ஆசிரியைகள் உள்பட 8 போ் ஜிடிஆா் தோ்வு மைய அறைக் கண்காணிப்பாளா் பணியில் நியமிக்கப்பட்டனா். இந்த இடமாறுதல் விவகாரம் தோ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களிடயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com