நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் காமராஜா் சிலை அருகே சேலம் மண்டல விசைத்தறி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நூல் விலையைக் கட்டுப்படுத்துமாறு கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் காமராஜா் சிலை அருகே சேலம் மண்டல விசைத்தறி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நூல் விலையைக் கட்டுப்படுத்துமாறு கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஏ.கலைவாணன் தலைமை வகித்தாா். தொடா்ந்து அதிகரித்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்; பருத்தி, நூல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதைக் கண்டறிந்து அரசு வெளிச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்; பருத்தி, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதுடன், துணியாக மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும்; தமிழக அரசு ஜவுளித்துறைக்கென தனித் துறையினை உருவாக்கி தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகள் வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான விசைத்தறியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com