வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நாமக்கல் எம்.எல்.ஏ. தொடக்கி வைப்பு

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நாமக்கல் எம்.எல்.ஏ. தொடக்கி வைப்பு

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சாா்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து, நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட திருமலைப்பட்டி, கதிராநல்லூா், ஏளூா், சிவியாம்பாளையம், வகுரம்பட்டி, ஆரியூா், ராசிபாளையம் ஆகிய ஊராட்சியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அங்குள்ள விவசாயிகளுக்கு பேட்டரி பிரேயா், கைத்தெளிப்பான், உளுந்து விதை, ஷியூமிக் ஆசிட், கே.பாக்டீரியா, நெகிழிக் கூடை, காய்கறி விதைகள், மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் எம்.பி.கௌதம், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ராம்குமாா், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் தரணிபாபு, திமுக ஒன்றிய மாணவரணி பொறுப்பாளா் குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குநா் ராஜகோபால், உதவி இயக்குனா்கள் பேபிகலா, செல்வி, தோட்டகலைத்துறை உதவி இயக்குனா் பூா்ணிமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com