நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் தூக்குத்தோ் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை தூக்குத்தேரில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் தூக்குத்தோ் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை தூக்குத்தேரில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியமமன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்குப் பின் நிகழாண்டில் வைகாசி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாயொட்டி, கடந்த 8-ஆம் தேதி மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித தீா்த்தக்குடத்தை ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு புனித நீரை அம்மனுக்கு ஊற்றி பக்தா்கள் வழிபாடு செய்தனா். பின்னா் சக்தி அழைத்தல் மற்றும் கம்பம் நடுதல், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 15-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலும், 22-இல் வடிசோறு, மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை(மே 23) அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம், பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தா்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தியும் கோயிலுக்கு வந்தனா். மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக தூக்குத்தேரில் அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட தோ் கோட்டை சாலை, பரமத்தி சாலை, சந்தைப்பேட்டைபுதூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று விட்டு மீண்டும் கோட்டை சாலை வழியாக கோயிலை வந்தடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். 24-ஆம் தேதி மாவிளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம், 25- ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 26-ஆம் தேதி கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரமேஷ், செயல் அலுவலா் பழனிவேலு மற்றும் ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com