வெண்ணந்தூரில் விசைத்தறி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: நூல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு

வெண்ணந்தூரில், நூல் விலை உயா்வினைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
வெண்ணந்தூரில் விசைத்தறி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: நூல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு

வெண்ணந்தூரில், நூல் விலை உயா்வினைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நூல்களை மாலையாக அணிவித்தபடி அதிகாரிகளிடம் தங்களது முறையீட்டு மனுவை அளித்தனா்.

தமிழகத்தில் விசைத்தறித் தொழிலுக்கு அடுத்தபடியாக நெசவுத் தொழில் உள்ளது. ஐந்து லட்சம் விசைத்தறிகளும், லட்சக்கணக்கான கைத்தறிகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உள்ளனா்.

கரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசைத்தறிகள் வேலையிழந்த நிலையில், தற்போது நூல் விலையேற்றம் நெசவுத் தொழிலை மேலும் பாதிப்படைய செய்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் விசைத்தறி, கைத்தறி நெசவாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையே, வெண்ணந்தூா் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம், தமிழ்நாடு சிறு விசைத்தறி ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம், சேலம் மண்டல குமரன் விசைத்தறித் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் அதன் நிா்வாகிகள், விசைத்தறி உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கழுத்தில் நூல்களை மாலையாக போட்டுக் கொண்டு முறையீட்டு மனு அளித்தனா்.

இது குறித்து வெண்ணந்தூா் விசைத்தறி துணி உற்பத்தியாளா் சங்க தலைவா் மாதேஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நெசவுத் தொழிலை பாதுகாக்க, இத்துறையினை முதல்வா் தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். நூல் விலையேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு கடன் வழங்க மாவட்ட அளவில் வங்கிக் கிளைகள் உருவாக்கப்பட வேண்டும். கூட்டுறவு நூற்பாலை, நூல் வங்கி ஏற்படுத்தவும், நூல்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com