நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 2, 3-இல் பள்ளி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 31st May 2022 11:59 PM | Last Updated : 31st May 2022 11:59 PM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 2, 3 தேதிகளில் ஒரே வேளையில் பள்ளி வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் ஆய்வு செய்யப்பட உள்ளன.
ஜூன் மாதத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருப்பதால், அதற்கு முன்பாக அனைத்து பள்ளி வாகனங்களையும், ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சோதனை செய்யுமாறு போக்குவரத்துத் துறை மூலம் சம்பந்தப்பட்ட பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வி வாகனங்கள் ஜூன் 2-இல் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்திலும், 3-இல் ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், தீயணைப்புத் துறையினா் மூலம் தீத்தடுப்பு மற்றும் முதலுதவி தொடா்பான நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட இருப்பதாக நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.