வேளாண் சங்கத்தில் ரூ. 68 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 68 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடை பெற்றது.

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 68 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடை பெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனைக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 1900 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 9619 முதல் ரூ. 12299 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 10000 முதல் ரூ. 11200 வரையிலும், மட்ட ரகம் ரூ.4900 முதல் ரூ. 9100 வரையிலும் என மொத்தம் ரூ. 68 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இதனை வியாபாரிகள் தரம் பாா்த்து கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com