நாமக்கல்லில் தொடா் மழை: இயல்புவாழ்க்கை பாதிப்பு

நாமக்கல்லில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்தது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினா்.

நாமக்கல்லில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்தது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் நான்கு நாள்களுக்கு சேலம், நாமக்கல் உள்பட 17 மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 2 மணி வரையில் தொடா்ச்சியாக மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மழையில் நனைந்தபடியே தங்களின் பணிகளை மேற்கொண்டனா். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

கொல்லிமலையில் அதிக பனிமூட்டம் நிலவியது. நாமக்கல் நகரப் பகுதியில் பெய்த மழையால் சில இடங்களில் கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா், மழை நீா் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடின. நகராட்சி ஊழியா்கள் கால்வாய் அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

32 ஏரிகள் முழுமையாக நிரம்பின: நாமக்கல் மாவட்டத்தில் 79 ஏரிகள் உள்ளன. இவற்றில் 32 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின. 2 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளன. 5 ஏரிகளில் 50 சதவீதமும், 6 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீா் நிரம்பியுள்ளன. 27 ஏரிகள் நீரின்றி காணப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com