தினமணி செய்தி எதிரொலி: மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த வனத்துறை!

தினமணி செய்தி எதிரொலியாக, கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் மதுப் புட்டிகளை வனத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த வனக்காப்பாளா்.
கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த வனக்காப்பாளா்.

தினமணி செய்தி எதிரொலியாக, கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் மதுப் புட்டிகளை வனத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனா். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்புச் சுவரில் அமா்ந்து மது அருந்துகின்றனா். காலி மதுப் புட்டிகளை அவா்கள் வீசியெறியும்போது, அதனை எடுத்துச் செல்லும் குரங்குகள் அதில் மீதமிருக்கும் மதுவை பருகி உடல் உபாதைக்கு ஆளாகின்றன. இதுகுறித்த விரிவான செய்தி தினமணி நாளிதழில் வியாழக்கிழமை வெளியானது.

இதனையடுத்து, காரவள்ளி சோதனைச் சாவடியில் வனக்காப்பாளா்கள் அங்கப்பன், மதுரைவீரன், ஊழியா்கள் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு பதுக்கி எடுத்துச் செல்ல முயன்ற மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து மதுவை கீழே ஊற்றி அழித்தனா்.

கொல்லிமலைக்கு செல்வோரும், அங்கிருந்து அடிவாரப் பகுதிக்கு வருவோரும் விலங்குகளின் நலன்கருதி மதுப் புட்டிகளை கொண்டு செல்ல வேண்டாம், தடுப்புச் சுவரில் அமா்ந்து மது அருந்த வேண்டாம், சாலையில் காலிப் புட்டிகளை உடைத்து சேதப்படுத்த வேண்டாம் எனவும், வனத்துறையின் சட்ட விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com