நவ. 26, 27-இல் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் முகாமானது சனி, ஞாயிறு (நவ. 26, 27) ஆகிய நாள்களில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது. இதில், பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம்.

முகாமின் போது, 01.01.2023 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) பெயரானது ஜனவரி 2023-இல் வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறும். மேலும், 31.12.2005 அன்றோஅல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்களும் தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இவா்களின் பெயரானது 18 வயது பூா்த்தியடைந்த காலாண்டில் (2023 ஏப்ரல், ஜூலை, அக்டோபா் மாதம்) வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறக்கூடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் அட்டையுடன் இணைக்காதவா்கள் இணைத்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com