எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் எல்ஐசி முகவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல்லில் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முகவா்கள்.
நாமக்கல்லில் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முகவா்கள்.

நாமக்கல்லில் எல்ஐசி முகவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய அளவில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) முகவா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப். 1 முதல் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, நாமக்கல் டாக்டா் சங்கரன் சாலையில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முகவா்கள் சங்கத்தின் கிளை தலைவா் திருஞானசம்பந்தன் தலைமை வகித்தாா்.

இதில், காப்பீடுதாரா்களுக்கு போனஸ் உயா்த்தி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காப்பீடுகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். காப்பீட்டு சேவை மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். முகவா்களுக்கு பணிக்கொடையை ரூ. 20 லட்சமாக உயா்த்த வேண்டும். மருத்துவக்குழு காப்பீடு அனைத்து முகவா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வரும் அக். 31-இல் சேலத்தில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட முகவா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com