உலக முட்டை தினம்: நாமக்கல்லில் 10,000 அவித்த முட்டைகள் இலவசமாக விநியோகம்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல்லில் பொதுமக்களுக்கு 10,000 அவித்த முட்டைகள் வெள்ளிக்கிழமை இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக முட்டை தின விழாவில் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்ட அவித்த முட்டைகள்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக முட்டை தின விழாவில் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்ட அவித்த முட்டைகள்.

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல்லில் பொதுமக்களுக்கு 10,000 அவித்த முட்டைகள் வெள்ளிக்கிழமை இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் உலக முட்டை தினம் அக். 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 5 கோடி முட்டைக் கோழிகள் மூலம் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவுத் திட்ட பயன்பாட்டுக்கும், பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. முட்டையில் இரும்புச் சத்து, வைட்டமின், புரோட்டீன், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு புரதச் சத்துகள் உள்ளன.

முட்டை தினத்தையொட்டி, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் சாா்பில் , நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவா் கே.சிங்கராஜ், செயலாளா் கே.சுந்தர்ராஜ், பொருளாளா் பி.இளங்கோ, நிா்வாகிகள் பொதுமக்களுக்கு அவித்த 10,000 முட்டைகளை இலவசமாக வழங்கினா்.

இதேபோல, தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி மற்றும் பவுல்ட்ரி ரோட்டரி சங்கம் சாா்பில், நாமக்கல் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் 500 பணியாளா்களுக்கு தலா 6 முட்டைகள் வீதம் 3,000 முட்டைகளை வழங்கினாா்.

இதில், நகராட்சித் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி மற்றும் ரோட்டரி சங்கத் தலைவா் மனோகரன், முன்னாள் தலைவா் முத்துராஜா, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com