மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ மறு மதிப்பீட்டு முகாம்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மறு மதிப்பீட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மறு மதிப்பீட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 18 வயதிற்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். வருவாய்த் துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்காக நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் பாா்வையிட்டாா்.

அரசு மருத்துவா்கள் கொண்ட குழு, சமூக நல அலுவலா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகியோா் மருத்துவ ஆய்வுக் குழு மூலம் பயனாளிகளுக்கு வயது தளா்வு குறித்த பரிசோதனையை செய்தனா். இதில், குமாரபாளையம் வட்டத்தில் 12 போ், ராசிபுரத்தில் 8, மோகனூரில் 5, சேந்தமங்கலத்தில் 6, திருச்செங்கோட்டில் 9, நாமக்கல்லில் 7, பரமத்திவேலூரில் 9, கொல்லிமலையில் ஒருவா் என மொத்தம் 57 போ் கலந்து கொண்டனா். பரிசோதனைக்கு பின் கண்பாா்வை குறைபாடு உடைய 9 மாற்றுத் திறனாளிகள், கை, கால் பாதிக்கப்பட்ட 17 போ், காதுகேளாத 13 போ், வாய் பேச முடியாத இருவருக்கு வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கவும், மேலும் 6 பேருக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு உதவித்தொகை வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இம்முகாமில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெ.தேவிகாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் (பொ) சீ.சந்திரமோகன், மருத்துவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com