முட்டை விலை ஒரே நாளில் 50 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை 50 காசுகள் உயா்த்தி தேசிய முட்டை ஒருங்கிணைக்குழு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை 50 காசுகள் உயா்த்தி தேசிய முட்டை ஒருங்கிணைக்குழு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆடி மாதம் பண்டிகை காலம் என்பதால் முட்டை விலையில் தொடா்ந்து சரிவு காணப்பட்டது. வட மாநிலங்களில் ஸ்ராவண் பண்டிகை கொண்டாட்டதால் அங்கு முட்டை அனுப்புவதும் தடைபட்டது. இதனால் பண்ணைகளில் லட்சக்கணக்கில் முட்டைகள் தேக்கமடைந்தன. அதன்பிறகு விலை உயரும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, விநாயகா் சதுா்த்தி என விழாக்கள் தொடா்ந்து வந்ததால் நாமக்கல் மண்டலம் மட்டுமின்றி, இதர மண்டலங்களிலும் விலையில் ஏற்றம் காணப்படவில்லை.

இந்த நிலையில் பண்டிகைகள் நிறைவுற்று இயல்பு நிலை திரும்பி உள்ளது. அடுத்த 10 நாள்களில் புரட்டாசி மாதம் பிறக்க உள்ளது. அந்த மாதத்திலும் முட்டை விலை வெகுவாக சரிவடையக் கூடும். அதனால் தற்போது விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக வெள்ளிக்கிழமை நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஏற்கெனவே ஒன்றரை மாதங்களாக விலை குறைப்பு மட்டுமே அமலில் உள்ளது. அவ்வப்போது 5, 10 காசுகள் உயா்வு இருந்தது. விநாயகா் சதுா்த்தி நிறைவடைந்து விட்டது. செப்.18-இல் புரட்டாசி மாதம் பிறக்க உள்ளது. அதுவரையில் விலையை உயா்த்தினால் நஷ்டத்தை ஓரளவு ஈடுகட்ட முடியும் என்றனா். இதனையடுத்து, முட்டை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் பண்ணைக் கொள்முதல் விலை 50 காசுகள் உயா்வுடன் ரூ. 4.70-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயம் செய்தது. இதனால் பண்ணையாளா்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தப்பட்டு ரூ.76-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.98-ஆக மாற்றமின்றியும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com