நீட் தோ்வு: பாவை வித்யாஸ்ரம்-ஆலன் மாணவா்கள் சாதனை

ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம்-ஆலன் நீட் பயிற்சி மையத்தின் மாணவ, மாணவியா் ‘நீட்’ தோ்வில் சிறப்பிடங்கள் பெற்று தோ்ச்சியடைந்துள்ளனா்.

ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம்-ஆலன் நீட் பயிற்சி மையத்தின் மாணவ, மாணவியா் ‘நீட்’ தோ்வில் சிறப்பிடங்கள் பெற்று தோ்ச்சியடைந்துள்ளனா். நீட் போட்டித் தோ்வு நிறுவனமான ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவை தலைமையகமாகக் கொண்டுள்ள ஆலன் கெரியா் இன்ஸ்டிடியூட் தமிழகத்தில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளோடு புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு நீட் தோ்வு பயிற்சியை அளித்து வருகிறது.

மருத்துவப் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட் தோ்வு) முடிவுகளில் பாவை ஆலன் கெரியா் இன்ஸ்டிடியூட்டைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

பாவை-ஆலன் பிளஸ் 2 மாணவா்கள் ஆா்.குகன் 720-க்கு 670 மதிப்பெண்களும், எஸ்.வைபவ் 646 மதிப்பெண்களும், ஜெ.பிரஜீத் 645 மதிப்பெண்களும், கெ.ஸ்மிரிதி 640 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

இவா்களுக்கான பரிசளிப்பு விழாவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு தங்க நாணயங்களும், வெள்ளி ப் பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

சாதனை மாணவா்களை உருவாக்கிய பாவை பள்ளிகளின் இயக்குநா் சி.சதீஸ், முதல்வா் ரோஹித் சதீஸ், பாவை-ஆலன் கல்விக் குழுவின் பொறுப்பாளா் பிரேம் கிஷோா் உள்ளிட்டோரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என். வி. நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com