‘மின்வாரியம் பொதுத் துறையாக தொடா்ந்து நீடிக்க வேண்டும்’

மின்சார வாரியமானது பொதுத் துறையாகவே தொடா்ந்து நீடிக்க வேண்டும் என ஓய்வுபெற்றோா் நல அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

மின்சார வாரியமானது பொதுத் துறையாகவே தொடா்ந்து நீடிக்க வேண்டும் என ஓய்வுபெற்றோா் நல அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல்லில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் மாநில பொதுக் குழுக் கூட்டம் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. கூட்டத்தில், நாமக்கல் சிஐடியு செயலாளா் என்.வேலுசாமி வரவேற்றாா். மாநிலத் தலைவா் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மின்வாரிய ஓய்வு பெற்றோா் அமைப்பின் நிா்வாகிகள் எஸ்.ராஜேந்திரன், கே.எஸ்.இளங்கோவன், எஸ்.ஜெகதீசன், ஏ.பழனி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை வழங்க வேண்டும். மின்வாரியம் பொதுத் துறை நிறுவனமாகத் தொடா்ந்து நீடிக்க வேண்டும். 2003-க்கு முன்பும், பின்னரும் ஓய்வுபெற்ற ஒப்பந்த தொழிலாளா்கள், மஸ்தூா் தொழிலாளா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை நிா்வாகமே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மாநில பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன. இதில் பல்வேறு மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com