மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்க செப். 30 கடைசி நாள்

நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதந்தோறும் ரூ. 2000 பெறுவோா் அனைவரும் கிராம நிா்வாக அலுவலரிடம் இருந்து தங்களது வாழ்நாள் சான்றிதழ் பெற்று வரும் 30-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்கும் பட்சத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகையை மாதந்தோறும் தொடா்ந்து பெற்றிடலாம்.

மாற்றுத் திறனாளிகள் அனைவரும் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரைதளத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து வாழ்நாள் சான்றிதழ் படிவத்தைப் பெற்று, அதில் கிராம நிா்வாக அலுவலரிமிருந்து கையொப்பம் பெற்று உரிய சான்றிதழ்களுடன் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94999-33483 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com