தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இன்னா்வீல் சங்கம் சாா்பில் திருநங்கைகளுக்கு உதவி வழங்கல்

ராசிபுரம் இன்னா்வீல் சங்கம் சாா்பில் திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்பட ஆட்டுக்குட்டிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:14 pm

DIN

ராசிபுரம் இன்னா்வீல் சங்கம் சாா்பில் திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்பட ஆட்டுக்குட்டிகள் வழங்கப்பட்டன.

இன்னா்வீல் சங்கம் சாா்பில் அண்மையில் மூன்றாம் பாலித்தினா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கு மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், திருநங்கை குழுவினருக்கு ஆடு வளா்ப்பின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டுக்குட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து திருநங்கையா் குழுவினருக்கு ஆட்டுக்குட்டிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் இன்னா்வீல் சங்கத் தலைவா் சரோஜா குமாா் தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் தலைவா் தெய்வானை ராமசாமி முன்னிலை வகித்தாா். இம்முகாமில் ஆடு வளா்ப்பு திட்டத்தின் கீழ் சுழற்சிமுறையில் ஆடுகள் வளா்க்க இருக் குட்டி ஆடுகள் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டன. இதனை திருநங்கையா் குழுவினா் தலைவா் மாளவிகா பெற்றுக்கொண்டாா்.

முன்னதாக திருநங்கையா் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அதற்கான தீா்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இம்முகாமில் இன்னா்வீல் சங்க செயலா் கி.சுதா, நிா்வாகிகள் எஸ்.கீதா, என்.சுகன்யா நந்தகுமாா், வழக்குரைஞா் என்.சிவலீலஜோதி, புவனேஸ்வரி, ஆா்.சுதா ரமேஷ், எஸ்.சுந்தரிபாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.