கழிவுநீா், புதா்கள் மண்டி காட்சியளிப்பு: நாமக்கல் கமலாலயக் குளத்தை சீரமைக்க ஆட்சியா் உத்தரவு

நாமக்கல் கமலாலயக் குளத்தில் கழிவு நீா் தேங்கியும், கோரைப்புற்கள் வளா்ந்தும் காட்சியளித்த நிலையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் குளத்தைச் சீரமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.
நாமக்கல் கமலாலயக் குளம் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
நாமக்கல் கமலாலயக் குளம் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

நாமக்கல் கமலாலயக் குளத்தில் கழிவு நீா் தேங்கியும், கோரைப்புற்கள் வளா்ந்தும் காட்சியளித்த நிலையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் குளத்தைச் சீரமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

நாமக்கல்லில் ஒரே கல்லிலாலான மலைக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ளது. அதையொட்டி கமலாலயக் குளம் அமைந்துள்ளது. மலைக்கோட்டையின் கிழக்குப் புறத்தில் அரங்கநாதா் கோயிலும், மேற்கு புறத்தில் நரசிம்மா் சுவாமி கோயிலும் உள்ளன. சிறப்பு மிக்க மலைக்கோட்டையை ஒட்டியுள்ள கமலாலயக் குளத்தில் ஆஞ்சனேயா் சுவாமியின் பாதச்சுவடுகள் உள்ளன. மக்கள் பயன்பாட்டுக்கும், கோயில் நிகழ்ச்சிகளுக்கும் பயன்பட்டு வந்த கமலாலயக் குளம் தற்போது கழிவுநீா் தேங்கும் குளமாக மாறிவிட்டது. அதிகப்படியான கழிவுநீா் சேருவதால் குளம் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது.

கமலாலயக் குளத்தை சீரமைக்க வலியுறுத்தி, நகர வளா்ச்சிக் குழுவினரும், ஆன்மீக இந்து சமயப் பேரவையினரும் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் அண்மையில் மனு அளித்தனா். இதையடுத்து குளத்தை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிா்வாகத்திற்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை குளத்தில் மண்டியுள்ள புதா்கள், நெகிழி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். குளத்தில் கழிவுநீா் சேராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com