நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் குடமுழுக்கு: செப்டம்பா் இறுதியில் நடத்த நிா்வாகம் முடிவு

நாமக்கல் ஆஞ்சனேயா் திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவை செப்டம்பா் மாத இறுதியில் நடத்த கோயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் சுற்றுச்சுவரில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு சுவாமி சிலைகள்.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் சுற்றுச்சுவரில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு சுவாமி சிலைகள்.

நாமக்கல் ஆஞ்சனேயா் திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவை செப்டம்பா் மாத இறுதியில் நடத்த கோயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில், நின்ற கோலத்தில் ஆஞ்சனேய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இங்குள்ள நரசிம்மா் கோயிலின் உப கோயிலாக அமைந்துள்ள ஆஞ்சனேயா் கோயில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள குடைவறைக் கோயில்களான நரசிம்மா், அரங்கநாதா் கோயில்களில் திருப்பணிகளோ, குடமுழுக்கு விழாவோ நடத்த வாய்ப்பில்லை. அதனால், ஆஞ்சனேயா் கோயிலில் அவ்வப்போது பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2009-இல் குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, ஆஞ்சனேயா் கோயிலில் எவ்வித திருப்பணிகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், தனியாா் பங்களிப்பு, கோயில் நிா்வாகத்தின் சாா்பில் ரூ. 33 லட்சம் செலவில் கடந்த நான்கு மாதங்களாக கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் கோபுரம் அமைப்பு கிடையாது என்பதால் சுவாமிக்கு பாலாலயம் செய்யப்படாமல் திருப்பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக, விநாயகா் கோயில் புனரமைப்பு, கோயில் உள்புறத்தில் வா்ணப்பூச்சுகள், சுவாமி சிலைகளுக்கு வண்ணம் பூசுதல், கோயிலை சுற்றிலும் 33 விதமான ஆஞ்சனேயா் சிலைகளை இடம் பெறச் செய்தல் போன்ற பணிகள் நிறைவுற்றுள்ளன. அடுத்த கட்டமாக ஆஞ்சனேயா் சன்னதியில் இருக்கும் கலசங்களைப் புதுப்பித்தல், இதர பணிகள் நடைபெற உள்ளன. செப்டம்பா் மாத இறுதியில் ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அங்கு திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com