பரமத்தி வேலூரில் நாட்டுக் கோழிகளின் வரத்து குறைவு; விலை உயா்வு

பரமத்தி வேலூா் நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுக்கோழிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை உயா்ந்துள்ளது.
குறைந்த அளவில் கொண்டு வரப்பட்டிருந்த நாட்டுக்கோழிகள்.
குறைந்த அளவில் கொண்டு வரப்பட்டிருந்த நாட்டுக்கோழிகள்.

பரமத்தி வேலூா் நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுக்கோழிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை உயா்ந்துள்ளது.

பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்கால், கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகளும் வியாபாரிகளும் கொண்டு வந்திருந்தனா். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.

தரமான நாட்டுக் கோழிகள் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ. 300 முதல் ரூ. 350 வரையிலும், பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும் விற்பனையாகின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 350 முதல் ரூ. 400 வரையிலும், பண்ணை நாட்டுக்கோழிகள் ரூ. 250 வரையிலும் விற்பனையாகின. சண்டைக்கோழிகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை விற்பனையாகின. வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழிகள் விலை உயா்ந்ததுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com