கொல்லிமலையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தாா்.
கொல்லிமலையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்துக்குழிபட்டி, குண்டூா் நாடு, செம்மேடு, பூங்குளம்பட்டி, பெருமாப்பட்டி ஆகிய கிராமங்களில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நத்துக்குழிபட்டி அரசு உயா் நிலைப்பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் 210 மீட்டா் நீளத்திற்கு சுற்றுச்சுவா் கட்டும் பணியினையும், இதே திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் அமைத்துள்ளதையும் பாா்வையிட்டாா்.

செம்மேட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் உணவகத்துடன் கூடிய தேநீரகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அவா் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மேலும், கொல்லிமலை பெருமாப்பட்டியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தனபால், சரவணன், அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com