அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் அறிவுறுத்தினாா்.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் அறிவுறுத்தினாா்.

முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சகி - ஒருங்கிணைந்த சேவை மையம், நாமக்கல் கோட்டை தொடக்கப் பள்ளி, கருப்பட்டிபாளையம் போதை மறுவாழ்வு மையம், இளநகா் சிவபாக்கியம் முதியோா் இல்லம் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்பிறகு, நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சிறப்பான அடிப்படை கல்வியும், சுகாதாரமான முறையில் ருசியான சத்துணவு மற்றும் இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், ஒருங்கிணைந்த - சகி சேவை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இம்மையத்தின் மூலம் 574 வழக்குகள் பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மூலமாகவும், நேரடியாகவும் பெறப்பட்டு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டுள்ளது. போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் திருமணம் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக 165 -ற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி கடந்த காலங்களை விட குழந்தை திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை அலுவலா்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா்மு.மணிமேகலை, நாமக்கல் நகராட்சி ஆணையாளா் கி.மு.சுதா, மாவட்ட சமூகநல அலுவலா் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com