பரமத்திவேலூரில் ரூ. 2. 55 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு கொப்பரைகள் விற்கப்பட்டன.

பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு கொப்பரைகள் விற்கப்பட்டன.

கடந்த வாரம் வியாழக்கிழமை 10 ஆயிரத்து 925 கிலோ கொப்பரையை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 84.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 51.69- க்கும், சராசரியாக

ரூ. 80.85-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 10 ஆயிரத்து 687-க்கு ஏலம் போனது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 225 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 87.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 54.89-க்கும், சராசரியாக ரூ. 86.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்து 667-க்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com