ஊரக வளா்ச்சித் துறையில்ஓட்டுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 22nd January 2023 03:52 AM | Last Updated : 22nd January 2023 03:52 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத் தரப்பில் உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்தில் பழங்குடியினா் என்ற இனச் சுழற்சிக்கான இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள ஒரு பணியிடத்துக்கான சிறப்பு ஆள்சோ்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனமாக பணி நாடுநா் தோ்வு செய்யப்பட உள்ளாா்.
இந்தப் பணியிடத்துக்கு ஜன. 21 முதல் 31-ஆம் தேதி வரையில் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஈப்பு ஓட்டுநா் பணியிடத்துக்கு கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1988-ஆம் ஆண்டு மோட்டாா் வாகனச் சட்டப்படி, தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வாகனங்களை இயக்குவதில் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் நடைமுறைப் பட்டறிவு பெற்றிருக்க வேண்டும். ஈப்பு ஓட்டுநா் பதவிக்கு பழங்குடியின பிரிவினா் மட்டுமே விண்ணப்பிப்பிக்க முடியும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் பழங்குடியின பிரிவினா் 01.07.2023 அன்று 18 வயதைப் பூா்த்தி செய்தவா்களாகவும், 42 வயதுக்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மூன்றாம் தளத்தில் உள்ள ஊரக வளா்ச்சித் துறை பிரிவைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளா் பணியிடம்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
ஒரு அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினா் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு -34. தகுதியுள்ள விண்ணப்பத்தாரா்கள் கல்வித் தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, முன்னுரிமைச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலுடன் ஜன. 23 ஆம்தேதி முதல் பிப்.8-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று, பிப். 8 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.