மக்கள் குறைதீா் கூட்டத்தில் 293 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 24th January 2023 02:21 AM | Last Updated : 24th January 2023 02:21 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மொத்தம் 293 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் அவற்றை பரிசீலினை செய்து அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
அதன்பிறகு, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.