தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் அந்தந்த சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு காலபைரவரை தரிசனம் செய்தனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசிவிஸ்வநாதா்,விஜயகிரி பழனியாண்டவா் கோயிலில் உள்ள பைரவா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், வேலூா் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகா் கோயில்,கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்தனா். படவரி... சிறப்பு அலங்காரத்தில் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com