நாமக்கல் மாவட்டத்தில்
174 பதற்றமான வாக்குச் சாவடிகள்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 174 பதற்றமான வாக்குச் சாவடிகள்: ஆட்சியா் தகவல்

மக்களவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

நாமக்கல்: மக்களவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அத்தனூா், கட்டனாச்சம்பட்டி, வடுகம், சிங்களாந்தபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா திங்கள்கிழமை பதற்றமானவையாகக் கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா். ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் 687 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இவற்றில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் ஜன. 22-ஆம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, ஆண் வாக்காளா்கள் 6,93,728, பெண் வாக்காளா்கள் 7,38,383, இதர வாக்காளா்கள் 196 என மொத்தம் 14,32,307 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 53 வாக்குப் பதிவு மையங்களில், 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவை, ராசிபுரம் -19, சேந்தமங்கலம் - 29, நாமக்கல் - 18, பரமத்தி வேலூா்-26, திருச்செங்கோடு - 33, குமாரபாளையம் - 49 எண்ணிக்கையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இந்த ஆய்வின்போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியா் சரவணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா். -- என்கே-1-பூத் வெண்ணந்தூா் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடியை திங்கள்கிழமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ச.உமா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com