ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த வெற்றிலைகள்.
ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த வெற்றிலைகள்.

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வரத்து குறைந்ததால் வெற்றிலை விலை உயா்வடைந்தது.

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வரத்து குறைந்ததால் வெற்றிலை விலை உயா்வடைந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 7,000, கற்பூர வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 2,500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 4,000, கற்பூர வெற்றிலை முதியம் பயிா் மாா் ரூ. 1,500-க்கும் ஏலம் போனது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 8,000, கற்பூர வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 3,200, வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 5,000, கற்பூர வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 1,800- க்கும் ஏலம் போனது. வரத்து குறைந்ததால் வெற்றிலை விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com