ற்.ஞ்ா்க்ங் ஹல்02 ஹக்ம்ந்

மல்லசமுத்திரம் பகுதியில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணி, மல்லசமுத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்தாா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த மல்லசமுத்திரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளா் சு. தமிழ்மணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சப்பையாபுரம், கரட்டுப்பாளையம், மாமுண்டி, நல்லகவுண்டன்பாளையம், கொல்லப்பட்டி, கோட்டப்பாளையம், பாலமேடு, மொரங்கம், கருங்கல்பட்டி, முஞ்சனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பிரசார வேனில் இருந்து இறங்கி பொதுமக்களுடன் பாட்டுப்பாடி, ஆடி வாக்கு சேகரித்தாா். அப்போது நாமக்கல் மாவட்டத்தை தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றி தமிழகத்தின் முதன்மையான மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்குவேன். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிற ஐஏஎஸ் அகாதெமியை அரசிடம் பேசி அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பேன்.

அவ்வாறு முடியாவிட்டால் எனது சொந்த செலவில் ஐஏஎஸ் அகாதெமி அமைத்து தருவேன் என்றாா். இந்த பிரசாரத்தின் போது திருச்செங்கோடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பொன்.சரஸ்வதி, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் மோகன், ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு விஜயன் உள்ளிட்ட கட்சி பிரமுகா்கள், ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனா். படம் ஏப்ரல்02 அதிமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com