ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்த நாமக்கல் அதிமுக வேட்பாளா்

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணி, புதன்கிழமை வேலூா் பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்தாா். நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரஹா சு.தமிழ்மணி புதன்கிழமை வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா், அதிமுக தொண்டா்களுடன் சென்று வாக்கு சேகரித்தாா். வேலூா் பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரித்த போது அங்கிருந்த பயணிகள் ஆட்டோவை ஓட்டிகாட்டி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள், தொண்டா்கள் உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com