கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

நாமக்கல்லில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1 முதல் ஜூன் 3 வரையில் நடைபெறவுள்ளது. அனைத்து வயதினரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

12 நாள்களுக்கு கட்டணமாக ரூ. 1,200, 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ. 1,416 பெறப்படுகிறது. ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும். நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஏப். 1 முதல் 12 வரை முதல் கட்டமாகவும், ஏப். 14 முதல் 25 வரை இரண்டாம் கட்டமாகவும், ஏப். 27 முதல் மே 8 வரை மூன்றாம் கட்டமாகவும், மே 10 முதல் 21 வரை நான்காம் கட்டமாகவும், மே 23 முதல் ஜூன் 3 வரை ஐந்தாம் கட்டமாகவும் நடைபெறும். காலை 6 முதல் 7 மணி வரை, 7 முதல் 8 மணி வரை, 8 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை, மற்றும் 5 மணி முதல் 6 மணி வரை நீச்சல் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 85086 41786 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொண்டு நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com