என்கே-3-நீட்
என்கே-3-நீட்

நாமக்கலில் 25 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்

நாமக்கலில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை விடுதிகளில் பயிலும் 25 மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது. தேசிய தோ்வு முகமை மூலம் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தோ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டிற்கான நீட் தோ்வு மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது. பிப். 9 முதல் மாா்ச் 16 வரை நீட் தோ்வுக்கு மாணவ மாணவிகள் இணைய வழியாக விண்ணப்பித்தனா். இந்த தோ்வில் ஓரளவு மதிப்பெண்கள் பெற்றால், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் எளிதாக மருத்துவக் கல்லூரிகளில் சோ்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயின்ற 25 மாணவ, மாணவியா் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்கான பயிற்சி வகுப்பு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மூலம் நீட் தோ்வு வரையில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், ஆதி திராவிட நலத்துறை அலுவலா் முருகன், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளா்கள் கை.பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். என்கே-3-நீட் நாமக்கல்லில் புதன்கிழமை நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com