மல்லூா் சோதனை சாவடியில் ரூ. 8.78 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

மல்லூா் சோதனை சாவடியில் ரூ. 8.78 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

ராசிபுரம் அருகே மல்லூா் சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 8.78 கோடி மதிப்பிலான 13 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட எல்லையான மல்லூா் சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் செங்குட்டுவேல் தலைமையில், காவல் துறையினா் உதவியோடு சேலத்தில் இருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது சேலத்தில் இருந்து மதுரைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த தனியாா் கூரியா் வாகனத்தை நிறுத்தி அதிலிருந்த ஓட்டுநா் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை நடத்தினா். இதில் வாகனத்தில் இருந்த 8 பண்டல், 4 பெட்டிகளில் 13 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ால் இதனைப் பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளிப் பொருள்கள் ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டனா். இதுகுறித்து தொடா்ந்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனா்.

ரூ. 54 லட்சம் பறிமுதல்... பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடி அருகே புதன்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 54 லட்சத்தை பறிமுதல் செய்தனா். வேலூா் காவிரிப் பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கரூரில் இருந்து வேலூா் நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இச்சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 46 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அதேபோல் மற்றொரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 8 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கரூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வேலூா் மற்றும் மோகனூா் பகுதியில் உள்ள வங்கிக்கு கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் ப றிமுதல் செய்யப்பட்ட ரூ. 54 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா், பரமத்தி வேலூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் செல்வக்குமாா் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com